செல்பி மோகத்தை அதிகரிக்கும் புதிய ஸ்மார்ட்போன்!

Loading...

செல்பி மோகத்தை அதிகரிக்கும் புதிய ஸ்மார்ட்போன்!சீனாவின் ஹுவாவே நிறுவனம் ஹானர் 7i என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கமெராவை, செல்பி மோகத்துடன் இருக்கும் ஆட்களுக்கு பிடித்தமாதிரி வடிவமைத்துள்ளனர்.

ஹானர் 7i-ன் பின் கமெரா 13 மெகா பிக்சல் மற்றும் ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டது, பின் கமெராவை, ஃபிளாஷுடன் சேர்த்து 180 டிகிரிக்கு திருப்ப முடியும்.

ஏற்கனவே சில ஸ்மார்ட்போன்கள் கமெராவை திருப்பும் வசதியுடன் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும், இது செல்பி விரும்பிகளுக்கென பிரத்யேகமாக கமெராவை விருப்பப்படி திருப்பிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருளிலும் இனி நல்ல செல்பி எடுத்துக்கொள்ள இந்த ஸ்மார்ட்போன் வழிவகுக்கும். 5.2 இன்ச் அளவுகொண்ட ஹானர் 7i, 1080பி ஸ்கிரினும், 616 ஸ்நேப்டிராகன் புராஸஸர், இரு நேனோ சிம்கள், 16GB உள்ளடக்க மெமரி மற்றும் 2GB ரேம் வசதியுடன் கிடைக்கிறது.

அது மட்டுமின்றி 32GB உள்ளடக்க மெமரி, 3GB ரேம் வசதியுடன் இன்னொரு மொடலும் சீனாவில் மட்டும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது ஹானர் 7i வெள்ளி மற்றும் தங்க நிறத்தில் சுமார் ஆயிரத்து அறுநூறு யுவானிலிருந்து விற்பனை தொடங்குகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply