சுரைக்காய் அல்வா

Loading...

சுரைக்காய் அல்வாசுரைக்காய் – 1/2 கிலோ
சீனி – 6 1/4 கப்
பால்கோவா – 100 கிராம்
நெய் – 100 கிராம்
குங்குமப்பூ – 10 கிராம்
ஏலக்காய் – 5
சாரப்பருப்பு – 20 கிராம்
பிஸ்தா பருப்பு – 20 கிராம்

சுரைக்காயை தோல் சீவி தேங்காய்ப்பூ போல் துருவி எடுத்துக் கொள்ளவும்.
துருவிய சுரைக்காயை பிழிந்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியுடன் அளவான நீர் சேர்த்து கம்பிப் பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
கொதிக்கும் பாகில் பிழிந்து வைத்துள்ள சுரைக்காய் துருவலைப் போட்டு கிளறவும்.
நீரானது சுண்டி அல்வா பதத்திற்கு வரும்போது பால்கோவாவை சேர்த்து நெய் விட்டுக் கிளறவும்.
பிறகு குங்குமப்பூ, பொடித்த ஏலக்காய், வறுத்த பிஸ்தாப்பருப்பு, வறுத்த சாரப்பருப்பு ஆகியவற்றையும் போட்டு கிளறி எடுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply