சுருக்கம் நீங்க…

Loading...

சுருக்கம் நீங்க...முகத்தை சோப் போட்டு கழுவினாலே போதும் என்று நினைக்க கூடாது. அதையும் முறையாகச் செய்தால் முகம் பொலிவாகத் தெரியும். சோப் இல்லாமலும் முகத்தை சுத்தப்படுத்த முடியும். பூந்திக்காய் 10, 1 லிட்டர் தண்ணீர் இரண்டையும் கொதிக்க விடவும். நுரையாக வரும்போது அடுப்பை அணைத்து விடவும். பின்பு பூந்திக்காயை நன்றாக மசித்து அந்த நீரை வடிகட்டி முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும். இந்த நீரை மூன்று நாள் வரையிலும் பயன்படுத்தலாம்.

பருக்கள் நீங்க:-

1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.

தளர்ந்த முகம் இறுக்கமாக:-

ஒரு மண்சட்டியில் 20 கிராம் மல்லித்தூள், 1 லிட்டர் சுத்தமான நீர், இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை கலந்து இரண்டு நாள்கள் அரை மணி நேரம் வெயிலில் வைத்து எடுக்கவும். பின்பு மேலாக உள்ள நீரை வடிகட்டி முகத்தை கழுவவும். இது தளர்ந்த சரும்மத்தை வலுவடையச் செய்யும்.

முகச் சுருக்கங்கள்:-

வயதானவர்களுக்கு, அதிகமாக வெயிலில் இருப்பவர்கள், கோபப்படுபவர்களுக்கு சிக்கிரம் சருமம் சுருங்கிவிடும். கோபப்படும்போது முகத்தில் 44 தசைகளை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே முகச்சுருக்கம் உண்டாகும். ஆனால் சிரிக்கும் போது 14 தசைகள் மட்டுமே செலவாகின்றன. சந்தோஷமாக சிரிக்கலாம் கோபப்படக் கூடாது. முக அழகு கெட்டுவிடும். அவ்வப்போது முகத்துக்கான சில பயிற்சிகளை செய்தால் முகச்சுருக்கம் விழாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஆவி பிடித்தல்:-

மாதம் இரண்டு முறை முகத்துக்கு ஆவி பிடித்தால் மாசு, மரு இல்லாமல் முகத்தை பார்த்துக் கொள்ளலாம். துளசி இலை, டீத்தூள், சாமந்தி பூவின் இதழ்கள் தலா 1 டீஸ்பூன் எடுத்து 2 லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் போடவும். அந்த ஆவியில் ஒரு அடி தள்ளி முகத்தை வைத்து 5-லிருந்து 8 நிமிடங்கள் ஆவி பிடிக்கவும். பின் சுத்தமான துணி அல்லது பஞ்சினால் முகத்தை துடைத்தால் உள்ளிருக்கும் அழுக்குகள் வருவதை பார்க்கலாம். உடனே குளிர்ந்த நீரால் முகத்தை அலம்பவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply