சுருக்கமில்லாத முகம்!

Loading...

சுருக்கமில்லாத முகம்!பெரும்பாலான இளம் பெண்கள் தற்போது “பாஸ்ட் புட்” வகை உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள். இதனால் அவர்களது முகம் இளவயதிலேயே வயதானவர் போல சுருக்கம் விழுந்து அழகை இழந்து தவிக்கிறார்கள்.

சுருக்கமில்லாத முகம் விரும்புபவர்கள் கவனமா கேட்டுக்குங்க…

அந்தந்த சிசனில் கிடைக்கும் காய்கறி-பழங்களைத் தவறாமல் சாப்பிட்டு விடுங்கள். இயற்கையான காய்கறி, பழங்களில் இருக்கும் விட்டமின்களும், சத்துக்களும் தோளில் சுருக்கம் வருவதற்கே அனுமதி கொடுக்காது.

வாரம் ஒன்று அல்லது 2 முறை ஆரஞ்சு ஜூஸோ (Orange Juice) , கேரட் ஜூஸோ (Carrot Juice) குடித்து வந்தால் சருமம், ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும்.

ஆறு சுவைகளில் துவர்ப்புச் சுவை தான் பெண்களின இளமைக்கு பாதுகாப்பானதாக உள்ளது. வாழைப்பூ, வாழைத் தண்டு, பெரிய நெல்லிக்காய் (Amla) போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, இளமையின் ஆயுள் அதிகரிக்கும்.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு சிரகத்துடன் வேகவைத்து மசித்து சாப்பிட்டு வாருங்கள். வாரம் 2 அல்லது 3 முறை இப்படி சாப்பிட்டு வர உடல் குளுமையாக இருக்கும். அதோடு இந்த ரெசிபி ஜீரண சக்தியைத் தூண்டி விட்டு, கழிவுகளை சுத்தமாக வெளியேற்றி விடும்.

இன்னொரு முக்கியமான விஷயம், வெந்தயக் கீரை நமது சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். எனவே தோல் சுருக்கத்தை விரட்ட வெந்தயக் கீரையை தாராளமா சாப்பிடுங்க.

மசாஜ்: நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கமா அது எங்கே என்பீர்கள்.

கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் “ஏ” இளமையான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

முழங்கையை “பளிச்” ஆக்க…!

பெண்கள் பலர் நாற்காலியில் ஒரே பொசிஷனில் அமர்வதுண்டு. இப்படி அமர்ந்திருந்தால் முட்டிகள் உராய்ந்து கறுத்துப் போகும். நாற்காலியில் வியர்வை படாமல் பார்த்துக் கொண்டாலும், முட்டி கறுப்பாகாது. நாற்காலியின் கைப்பிடிகளின் மீது டவலையோ அல்லது வெல்வெட் துணியையோ போட்டும் உட்காரலாம். இதனால் கைமுட்டி உராயாமல் இருக்கும்.

முட்டியின் கறுப்பு நிறத்தை அகற்ற…

4 தேக்கரண்டி ஆரஞ்சுத் தோல் பவுடரை, 4 தேக்கரண்டி பாலில் ஊறவைத்து கலந்து கொண்டு முட்டியில் பூசி லேசாகத் தேய்த்து விட்டு, 10 நிமிடங்களுக்குப் பின் தண்ணீரில் கழுவி விடலாம்.

மாய்சுரைசர்-கிரீம்கள், வாசலைன் (vaseline) மாதிரியான கிரீம்களை பூசுவதாலும் முட்டியின் கறுத்த நிறம் போய் விடும் என்கிறார் சித்த மருத்துவர் தி.வேணி!

நக அழகு பராமரிப்பு

நகங்களில் ஈரப்பசை பற்றாக்குறையுடன் காணப்பட்டால் அவை உடைந்து, சிதைந்து போய் விடும். இந்த நகங்களை மர ஸ்டிக்கினால் (நெயில்கட்டரில் ஷேப் செய்ய பயன்படுத்தும் பகுதி போன்றது) தேய்த்து சரி செய்யவும்.

நகங்களில் கட்டாயமாக ஆலிவ் எண்ணை அல்லது பாதாம் எண்ணை தொடர்ந்து தடவி வந்தால் சிதைந்த நகங்களும் கூட உயிர் பெறும். நம்மூரில் பெண்கள் பலர் நகங்களில் பாலிஷ் போடுவதுண்டு. விருந்து விழாக்களுக்கு போகும் பெண்கள் நகங்களில் அழகான டிசைன்கள் போடலாம். இதுதவிர நகத்தில் கற்களைப் பதித்து அசத்தலாக அலங்காரம் செய்யலாம். இப்படி செய்தால் செம அழகாக ஜொலிப்பீர்கள்.

சாதாரணமான நகங்கள் என்பது பிங்க் கலரில் பள, பளவென இருக்கும். ஆனால் துணி துவைக்கும் சோப், உப்புத் தண்ணீர் போன்றவை இந்நகங்களில் அடிக்கடி பட்டால் நகம் உடைந்து விட வாய்ப்பு அதிகம். இவற்றை பாதுகாக்க ஒரு சூப்பர் யோசனை.

வாரத்தில் 3 நாட்களாவது இரவு படுக்கும் முன்பு 1 டீஸ்பூன் சர்க்கரையுடன் 4 டீஸ்பூன் தேன்கலந்து நகங்களில் தடவிக் கொள்ளவும். 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவி வர, சாதாரண நகங்கள் தகதக ஜொலிப்புடன் அழகாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply