சில்லி மட்டன் வறுவல்

Loading...

சில்லி மட்டன் வறுவல்ஆட்டு இறைச்சி – அரை கிலோ
மிளகாய்த்தூள் – அரை மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் – 5
உருளைக்கிழங்கு – கால் கிலோ
மஞ்சள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 50 கிராம்
பூண்டு – 5
வெங்காயம் – அரை கிலோ
இஞ்சி – ஒரு துண்டு
வினிகர் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

முதலில் பூண்டை எடுத்து தோல் உரித்து அதை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் பச்சைமிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வினிகர் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு வெங்காயத்தில் உள்ள தோலை உரித்து வைக்கவும்.
இறைச்சியை நன்கு சுத்தமாக கழுவி வைத்த பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் வெங்காயத்தை நன்கு வதக்கவும், வதக்கிய பின் உருளைக்கிழங்கையும் அதில் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் வேக வைத்த கறியை அதில் போடவும். பின்னர் அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்துக் கொள்ளவும்.
அதற்கு தகுந்தபடி தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வைக்கவும்.
பின்னர் நன்கு கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, சூடாக பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply