சிறுநீரக நோய் தீர்க்கும் வாழைத்தண்டு

Loading...

சிறுநீரக நோய் தீர்க்கும் வாழைத்தண்டுசிறுநீரக பிரச்சினைகள் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு வாழைத்தண்டு சிறந்த மருந்தாக இருப்பதால், அதன் மவுசும் அதிகரித்துள்ளது. நம் உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. கழிவுகள் சரியான நேரத்தில் வெளியேற நாம் ஒருபோதும் தடைவிதிக்கக்கூடாது.

பலரும் தங்கள் பணியாலோ, சூழ்நிலைகளாலோ சிறுநீர் கழிப்பதை தள்ளிவைத்துவிடுகிறார்கள். சிறுநீரை கட்டுப்படுத்துவது உடலில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிவிடும். நோயால் சிறுநீர் சரியாக வெளியேறாமல் இருந்தாலும் பிரச்சினைதான். சிறுநீரக கல் தொந்தரவாலும் இப்போது பலர் அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிக காரமான உணவுகளை சாப்பிடுதல், மிக குறைவாக நீர் அருந்துதல், மது அருந்தும் பழக்கம், அதிக தூரம் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டிச் செல்லுதல், வீரியமான மருந்துகளை உட்கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரக கல் தோன்றுகிறது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும், உணவின் மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டு சிறுநீரக கற்களை வெளியேற்றுவதற்கான சிறந்த மருந்து. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதன் மூலம் தொடக்க நிலையில் இருக்கும் சிறுநீரக கற்களை வெளியேற்றி விடலாம். வாழைத்தண்டு நார்ச்சத்து நிறைந்த உணவாகும். அதனால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு நிறைந்திருப்பவர்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள லாம். வாழைத்தண்டு ரத்தத்தை தூய்மை செய்யும் சக்தி கொண்டது. உடலில் உள்ள அமிலத்தன்மையையும் நீக்கும்.

உடலை குளிர்ச்சியாக்கவும் செய்யும். மலச்சிக்கலையும் நீக்கும். வயிற்றுப் புண் இருப்பவர்களும் இதனை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைத்தண்டு சாறு சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. நீர் கட்டு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று இருப்பவர்கள் இதனை பருகலாம். வாழைத்தண்டில் மூன்றில் ஒரு பங்கு தசையும், மூன்றில் இரண்டு பங்கு நீரும் உள்ளது. இதில் வைட்டமின் பி சத்தும் நிறைந்துள்ளது. பொட்டாசியமும் இருக்கிறது.

கொழுப்பு சத்து இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாழைத்தண்டில் டானின் எனப்படும் துவர்ப்பு சத்து நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் பொட்டாசியம் சத்து இதய தசைகளை நன்கு இயங்கவைக்கும். வாழைத்தண்டு பித்தப்பை கற்களையும் குறைக்கும். வாழைத்தண்டு சித்த மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது. சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் வாழைத்தண்டு சாறில் கலந்துகொடுக்கப்படுகிறது.

இதனால் நோயாளிகள் விரைவாக குணமடைவார்கள். வாழைத் தண்டை குறுக்காக மெலிதாக வட்டமாக வெட்டி விரலால் சுற்றி எடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் அதில் உள்ள நார்களை அகற்றி விடலாம். ஒரு பாத்திரத்தில் 50 மி.லி. மோர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்திருங்கள். வெட்டிய துண்டுகளை அதில் இட்டுவையுங்கள். இவ்வாறு செய்வதால் வெட்டிய துண்டுகள் நிறம் மாறாது. இவ்வாறு செய்யாவிட்டால் துண்டுகள் நிறம் மாறிவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply