சிக்கன் ஸ்ப்ரிங் ரோல்

Loading...

சிக்கன் ஸ்ப்ரிங் ரோல்சிக்கன் – 100 கிராம்
மைதா – கால் கிலோ
முட்டை – ஒன்று
முட்டைக்கோஸ் – 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்
காரட் – 25 கிராம்
மிளகுதூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய் – அரை லிட்டர்
வெங்காயம் – ஒன்று
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

முதலில் மைதா மாவில் முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி அத்துடன் உப்பு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்துக் கொள்ளவும்.
இதை அரை மணிநேரம் ஈரத்துணியைப் போட்டு மூடி வைக்கவும். அதன் பிறகு மசாலாவினைத் தயார் செய்யவும்.
முதலில் சிக்கனை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
காய்கறி மற்றும் சிக்கன் இவை இரண்டையும் நீள வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ், காரட், மிளகுத்தூள், உப்பு மற்றும் சிக்கன் இவை அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக வதக்கி இறக்கி விடவும்.
அடுத்து பிசைந்த மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து(வட்ட வடிவில்), அதன் மேல் மசாலாவை வைத்து மடித்து ரோலாக சுருட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த ரோல்களை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply