சிக்கன் உருண்டை

Loading...

சிக்கன் உருண்டைகோழிக்கறி – அரை கிலோ
சோம்பு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பட்டை – சிறுதுண்டு
கிராம்பு – 2
கசகசா – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் – 5
பொட்டுக்கடலை – 25 கிராம்
தேங்காய் – ஒன்று
எண்ணெய் – அரை லிட்டர்
வெங்காயம் – 2
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 5
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு

சோம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், பொட்டுக்கடலை, கசகசா, தேங்காய் அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
எலும்பில்லாத கோழிகறியை நன்றாக சுத்தம் செய்து சுத்தமாக நீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்த பொருட்களையும், கறியையும் ஒன்றாக பிசைந்து கொண்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி இவற்றை நன்றாக அரைத்து அந்த கலவையுடன் சேர்த்து உப்பு கலந்து வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு, பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply