சாக்லெட் சுருள் பிஸ்கட்டுகள்

Loading...

சாக்லெட் சுருள் பிஸ்கட்டுகள்மைதா மாவு – 120 கிராம்
வெண்ணெய் – 60 கிராம்
பொடித்த சர்க்கரை – 35 கிராம்
கோகோ – ஒரு தேக்கரண்டி
முட்டை – ஒன்று
உப்பு – ஒரு சிட்டிகை
பால் – தேவையான அளவு
லெமன் எசன்ஸ் – சில துளிகள்

மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக சலிக்கவும்.
வெண்ணெயை மாவுடன் சேர்த்து விரல் நுனிகளால் ரொட்டித்தூள் போல் ஆகும் வரை கலக்கவும்.
பிறகு அத்துடன் சர்க்கரையைச் சேர்க்கவும். மாவை இரு பிரிவுகளாக ஆக்கிக் கொள்ளவும்.
ஒரு பிரிவில் கோகோ, பால், அடித்த முட்டை சேர்த்து பூரி மாவு போல் கலக்கவும் (அடித்த முட்டையில் பாதி முட்டை அளவு).
மற்றொரு பிரிவில் முட்டை, பால் சேர்த்து லெமன் எசன்ஸ் விட்டு பூரி மாவு போல பிசையவும்.
இரு உருண்டைகளையும் தனித்தனி அப்பளங்களாக இட்டுக் கொள்ளவும்.
பிறகு ஒன்றின் மேல் ஒன்று வைத்து அப்பளக் குழவியால் சிறிது அழுத்திவிடவும் (இரண்டு அப்பளங்களும் சேர வேண்டும்). பாய் போல் சுருட்டிக் கொள்ளவும்.
குறுக்கு வாட்டில் கால் அங்குல பருமனுக்கு வெட்டி ஒவ்வொரு பிஸ்கட்டையும் நெய் தடவி, மாவு தூவிய தட்டில் வைத்து 400 டிகிரி F சூட்டில் சுமார் 15 இருந்து 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply