சரும பாதுகாப்பு

Loading...

சரும பாதுகாப்புசருமத்தில் பலவகைகள் உண்டு

1. உலர்ந்த சருமம்
2. எண்ணெய் கசிவுள்ள சருமம்
3. பலவகைப்பட்ட அமைப்புடைய சருமம்
4. சாதாரண சருமம்
5. உணர்ச்சியுள்ள, ஒவ்வாமையுடைய சருமம்.

சருமம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நாம் இருக்கிற இடம், குளிர் சாதன அறை, சூரியன், காற்று, கெட்ட காற்றை சுவாசித்தல் இவைகளினால் சருமத்திற்கு தொல்லைகள் வரலாம். வயதானால் சருமத்தின் தன்மையும் நிறமும் அமைப்பும் மாறும். வயது ஆக ஆக நம் உடம்பிற்கு மென்மை, ஈரப்பசை கொடுக்கும் உயிர் அணுக்கள் குறைந்து கொண்டே வருவதால் சருமத்திலும் ஈரப்பசை குறைந்து கொண்டே வரும். சருமத்தை நன்றாக வைத்துக் கொள்ளா விட்டால் அழகைக் கெடுக்கும் புள்ளிகள், மருக்கள், பருக்கள், கருப்பு வெள்ளை புள்ளிகள் உண்டாகும். இவையாவும் முகத்தின் மேல் தோன்றுபவையாகும்.

சரும பாதுகாப்பும் பராமரிப்பும் :

சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க நாம் உட்கொள்ளும் சத்துணவிலும் உடற்பயிற்சியிலும், சுத்த த்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
நமது சருமத்தின் வெளியில் தெரியும் மேல்பாகம் நுனனைநசஅளை என்றும் கீழ்பாகம் னுநசஅளை என்றும் கூறப்படுகிறது. எபிடேர் மிசில் பல லட்சம் உயிர் அணுக்கள் உள்ளன. இவை மேலும் மேலும் பெருகிக் கொண் டே வரும். உயிரற்ற அணுக்கள் நாம் கழுவும் போது வெளியேற்றப் படுகிறது. எபிடேர்மிஸ் முக்கியமாக டெர்மிஸைப் பாதுகாக்கிறது. டெர்மிஸ், இரத்தக்குழாய்கள், நரம்புகள், வேர்வைச் சுரப்பிகள், முடி சுரப்பிகள், சபேசியல் சுரப்பிகள் முதலியவைகளைக் கொண்டுள்ளது.

சபேசியஸ் சுரப்பிகள் சிபம் என்னும் கொழுப்புப்பொருளை உற்பத்தி செய்கிறது. சிபம் நமது சருமத்திற்குத் தேவையான எண்ணெய் பசையைக் கொடுத்து வேர்வையுடன் சேர்த்து சருமத்தை மென்மையாகவும், ஈரப்பசை உடையதாகவும் வைக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply