கோஸ் பொரியல்

Loading...

கோஸ் பொரியல்முட்டைக்கோஸ் – கால் கிலோ
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்ன வெங்காயம் – கொஞ்சம்
தேங்காய்ப்பூ – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
கடுகு – கொஞ்சம்
உளுந்து – கொஞ்சம்
நல்லெண்ணெய் – 2 கரண்டி

முதலில் முட்டைக்கோஸை கொத்து, கொத்தாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி எண்ணெய் சூடானதும் வெங்காயத் துண்டுகளைப் போட்டு சிவக்க விடவும்.
சிவந்து வரும்போது காய்ந்தமிளகாயை விதையை நீக்கி பாத்திரத்தில் போட்டு அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையையும் போட்டு கோஸைக் கழுவி, தண்ணீரை நன்கு வடித்து பாத்திரத்தில் போட்டுக் கிளறவும்.
தேவையான அளவு உப்பை சிறிதளவு தண்ணீரில் கெட்டியாய்க் கரைத்து ஊற்றி, பாத்திரத்தை திறந்து வைத்து பொரிய விடவும். தண்ணீர் சுண்டி, கோஸ் வெந்ததும் தேங்காய்ப்பூவைப் போட்டு கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply