கோழி ரோஸ்ட்

Loading...

கோழி ரோஸ்ட்கோழி – ஒன்று
தேங்காய் எண்ணெய் – 100 கிராம்
நெய் – 50 கிராம்
தயிர் – 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம் பழம் – ஒன்று
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி – ஒரு அங்குலம்
பூண்டு – ஒன்று
சிவப்பு பவுடர் – கால் தேக்கரண்டி

கோழியைத் தோல் நீக்கிப் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
தயிரில் கோழித் துண்டுகளை தட்டிய பூண்டு, இஞ்சி, சிவப்பு பவுடர், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊறின இறைச்சிய குக்கரில் போட்டு எண்ணெய், நெய், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து 20 நிமிடம் முக்கால் வேக்காடாக வேக வைக்கவும்.
குக்கரைத் திறந்து கறியைத் தனியாக எடுத்து சாற்றை வற்ற வைக்கவும்.
அதில் தெளிந்து மேலே உள்ள மீதி எண்ணெயை ஒரு வாணலியில் விட்டுக் காய்ந்ததும் கோழிக்கறி வெந்ததை இரண்டிரெண்டாகப் போட்டுச் சிறு தீயில் ரோஸ்ட்டாக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply