கோழி கொத்துக்கறி

Loading...

கோழி கொத்துக்கறிகோழிக் கறி – ஒரு கிலோ
மிளகு – 2 மேசைக்கரண்டி
பட்டை – 5
கிராம்பு – 10
வெங்காயம் – 150 கிராம்
பூண்டு – 25 பல்
பச்சைமிளகாய் – 10
தேங்காய் – அரை மூடி
தனியா தூள் – ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி – ஒரு அங்குலம்
எண்ணெய் – 10 தேக்கரண்டி
உப்பு – 1 மேசைக்கரண்டி

ஒரு கிலோ கோழிக்கறியை கொத்துக்கறி போல சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
மிளகு, பட்டை, கிராம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து கொள்ளவும். தேங்காயை தனியாக அரைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 10 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மசாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வதக்கிய பின் கோழிக்கறித் துண்டுகளுடன் உப்பு போட்டு அரைத்த மசாலாவுடன் சேர்த்துக் கிளறவும்.
5 நிமிடங்கள் வதங்கியபின் அரைத்த தேங்காயை சேர்த்து நன்றாக வதங்கியதும் தீயை மிதமாக்கவும்.
கோழிக்கறி வெந்து கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply