கோழி உருளைக் குழம்பு

Loading...

கோழி உருளைக் குழம்புகோழிக்கறி – முக்கால் கிலோ
உருளைக்கிழங்கு – கால் கிலோ(சிறியது)
பெரிய வெங்காயம் – 3
கொத்தமல்லித்தழை – 3 மேசைக்கரண்டி (நறுக்கியது)
இஞ்சி – அரை அங்குலத்துண்டு
மிளகாய்த்தூள் – அரைத்தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – 2 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
தக்காளி – 4
தயிர் – 2 கப்
மஞ்சள்தூள் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு

உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்து, குளிர்ந்த பின், தோலினை உரித்து நீளவாக்கில் இரண்டாக அரிந்து கொள்ளவும்.
நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையில் பாதியை எடுத்து உருளைக்கிழங்கிலும், கோழித் துண்டங்களின் மீதும் நன்கு தடவி சுமார் ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு அலுமினிய பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடேறியதும் மீதி உள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து அதன் பிறகு நறுக்கின தக்காளியை சேர்த்து, தீயை சற்று அதிகப்படுத்தி நன்கு வதக்கவும்.
அதன் பிறகு கோழித்துண்டங்களைச் சேர்த்துப் பிரட்டி சுமார் பத்து நிமிடங்களுக்கு வேகவிடவும்.
பிறகு இரண்டு கப் வெந்நீர் ஊற்றி வேகவிடவும். குழம்பு கொதித்தவுடன் அடுப்பின் தீயை சற்றுக் குறைத்து, மூடி வைத்து சிறிது நேரம் வேகவிடவும்.
கோழியானது வெந்து மிருதுவானவுடன் மசாலாவில் தோய்த்து வைத்துள்ள உருளைக்கிழங்குத் துண்டங்களைச் சேர்த்து, மெதுவாக கிளறி, தேவையெனில் மேலும் சிறிது சுடுநீர் சேர்த்து குறைந்த தீயில் 15 நிமிடங்களுக்கு வேகவிடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply