கோழிக்கறி பிரட்டல்

Loading...

கோழிக்கறி பிரட்டல்கோழிக்கறி – அரை கிலோ
நல்லெண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவைகேற்ப
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறு கட்டு
வெங்காயம் – கால் கிலோ
நாட்டுத்தக்காளி – கால் கிலோ
பூண்டு – 50 கிராம்
இஞ்சி – 50 கிராம்
பச்சைமிளகாய் – 3
மிளகாய்தூள் – 25 கிராம்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு 15 நிமிடம் பிசறி வைக்கவும்.
இஞ்சி, பூண்டினை பொடியாக நறுக்கி அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பை பற்ற வைத்து கடாய்யை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் இரண்டாக நறுக்கி போட்டு வதக்கவும்.
2 நிமிடம் வதக்கிய பிறகு கோழிக்கறியை அதில் கொட்டி வதக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீரை தெளித்துக் கொள்ளவும்.
10 நிமிடம் ஆனபிறகு தக்காளியை நன்றாக பிசைந்து அதில் கொட்டவும்.
தக்காளி வதங்கி, கறி நன்கு வெந்தவுடன் கொத்தமல்லியைப் பொடியாக அரிந்து போட்டு இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply