கோதுமை அல்வா

Loading...

கோதுமை அல்வாசம்பா கோதுமை – 250 கிராம்
சீனி – 750 கிராம்
நெய் – 250 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
ஏலப்பொடி – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை – அரை மூடி

கோதுமையை முந்தினம் இரவே ஊறவைத்து மறுநாள் காலை மூன்று முறை ஆட்டி பிழிந்து பால் எடுத்து தனியே வைத்துவிடவும்.
பாலும், தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் இருக்குமாறு எடுக்கவும்.
மாலையில் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தயார் செய்து வைத்து இருக்கும் கோதுமை பாலில் சீனியைக் கொட்டி, கலர்பொடி சேர்த்து அடிப்பிடிக்காமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
ஒட்டும்பொழுது சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
அல்வா பதம் வரும்போது நெய் கக்க ஆரம்பிக்கும். அப்போது சிறிது எலுமிச்சம்பழம் பிழிந்து, ஏலப்பொடி கலந்து, சிறிது நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து அதனையும் சேர்த்து கிண்டவும்.
நெய் கக்கின பிறகு சுமார் அரை மணி நேரம் வரை கிண்டி இறக்கவும். கக்கும் நெய்யை தனியாக வடித்து வைத்துவிடவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply