கோடைக்கேற்ற ஒரு குளியல்..

Loading...

கோடைக்கேற்ற ஒரு குளியல்..பயத்தம் பருப்பு- கால் கிலோ, வெள்ளரி விதை- 25 கிராம், கிச்சலிக்காய்- 50 கிராம் இவற்றை அரைத்துக் கொள்ளுங்கள். இதில் கலக்கும் அளவுக்கு இழைத்த சந்தனத்தைச் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளியுங்கள். இது தோலுக்குப் பாதுகாப்பையும் குளிர்சிசியையும் கொடுக்கும். வாசனையாகவும் இருக்கும்.

எலுமிச்சைத் தோலை சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள் இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து பாலில் கரைத்து உடம்பு முழுவதும் தேய்த்துக் குளியுங்கள். வெயிலின் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்கும் இந்த பேஸ்ட் குளியல்!

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் என ஒவ்வொரு நாள் ஒவ்வொரு எண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்றாக தடவுங்கள். ஒரு மணிநேரம் கழித்து மிதமான சுடுநீரில் குளியுங்கள். முடிக்கும் முன்பு சந்தன பவுடர், சிவப்பு சந்தன பவுடர் இரண்டையும் சம அளவு கலந்து உடம்பில் தேய்த்து அலசி விடுங்கள். இப்படி குளிப்பதால் உடல் சூடு தணிவதுடன் சருமமும் வறண்டு போகாமல் பளபளவென மின்னும். குற்றாலத்தில் இருப்பது போல் உடம்பு குளுகுளுவென்று இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply