கோடைகாலத்தில் வரும் பருக்களை போக்க வழிகள்

Loading...

கோடைகாலத்தில் வரும் பருக்களை போக்க வழிகள்கோடைகாலத்தில் முகம் வியர்க்க ஆரம்பித்துவிடுவதால் எளிதில் பருக்கள் வர வாய்ப்புகள் அதிகம். எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் என்றால் கொஞ்சம் அதிகமாகவே பருக்கள் ஏற்படும். கோடையில் சருமம் வியர்க்கும்போது, சருமத்துளைகள் திறந்து பாக்டீரியாக்கள் உள்ளே சென்று தொற்றுக்களை பரப்பி முகப்பருக்களை ஏற்படுத்தும். எனவே, கோடைகாலங்களில் பருக்கள் வராமல் இருக்க இதோ டிப்ஸ்

• எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, அதில் உள்ள வைட்டமின் சி, பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளை குணப்படுத்தும். எனவே எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம், அல்லது எலுமிச்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

• ஆலிவ் ஆயிலில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகளான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி, ஆலிவ் ஆயில் சருமத்துளைகளை சுத்தம் செய்து, பருக்கள் வருவதைத் தடுக்கும். எனவே தினமும் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வருவது நல்லது.

• பருக்களை நிரந்தரமாக நீக்குவதற்கு தயிர் ஒரு சிறப்பான உணவு. இதனைப் பயன்படுத்தி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு இதனை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் முகத்தில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply