கொள்ளு கார பருப்பு

Loading...

கொள்ளு கார பருப்புகொள்ளு – 100 கிராம்
பச்சைமிளகாய் – 2
மிளகாய் வற்றல் – 4
வெங்காயம் – 10
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
தனியா – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – அரை கொத்து
மல்லிதழை – ஒரு கைப்பிடி
பூண்டு – 4 பல்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைகேற்ப

முதலில் கொள்ளை சுத்தம் செய்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து வேக விடவும்.
தண்ணீரைத் தனியே வடித்து ரசத்திற்குப் பயன் படுத்தலாம். வெந்த கொள்ளு பருப்பை சிறிதளவு தண்ணீர் மட்டும் இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, சீரகம், மிளகு, மிளகாய், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் எடுத்து ஆறவிடவும். ஆறிய பிறகு வெந்த கொள்ளுடன் வதக்கி வைத்திருக்கும் பொருட்களையும் கறிவேப்பிலை, மல்லிதழை, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை ஒரு பத்திரத்தில் கொட்டி பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply