கை கழுவுவதால் மட்டும் பாக்டீரியா விலகாது

Loading...

கை கழுவுவதால் மட்டும் பாக்டீரியா விலகாதுகழிப்பறை கதவில் தொடங்கி பேருந்து கைப்பிடி வரை பல இடங்களிலிருந்து கிருமிகள் எளிதாகப் பரவுகின்றன. பொதுவாகவே நமது உடலின் மேல் பகுதியில் ‘கமன்சல்ஸ்’ என்ற பாக்டீரியாக்கள் அதிகம். சுற்றியுள்ள காற்று, உட்கொள்ளும் இறைச்சி போன்றவற்றாலும் பாக்டீரியாக்கள் கைகளில் தொற்றிக்கொள்ளும். தொடர்ந்து உடலின் பல பகுதிகளுக்குப் பரவும்.

விரைவில் எண்ணிக்கையில் பெருகி நோய்களை ஏற்படுத்தும். கைகழுவுவது இத்தகைய பாதிப்புகளை தடுக்கிறதா என்று இங்கிலாந்தின் பிராட்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். ”அடிக்கடி கை கழுவுவதால் எந்தப் பலனும் இல்லை. அப்போது பாக்டீரியா கிருமிகள் நகருமே தவிர, கையை விட்டு விலகாது.

அடிக்கடி கழுவும்போது ஈரப்பதம் அதிகரிப்பதால் பாக்டீரியா கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மின் டிரையர் பயன்படுத்தி, கைகளை நன்கு தேய்த்து காயவைப்பதும் பாக்டீரியா நகரவே உதவி செய்யும். கிருமிகள் ஒழிக்கும் சோப்பு, ஹேண்ட்வாஷ் பயன்படுத்தி கை கழுவுவதே சிறந்தது.

பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள பேப்பர் டவல்களை கொண்டு உடனடியாக கையை ஈரம் போகத் துடைக்க வேண்டும். அதிக வெப்பத்தை வெளியேற்றும் டிரையர்கள் உதவியுடன் காயவைக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே கை பாக்டீரியா பயமின்றி சுத்தமாகும்”

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply