கைகளின் அழகு குறையாமலிருக்க…

Loading...

கைகளின் அழகு குறையாமலிருக்க...தினசரி டைப் அடிக்கும் பெண்கள், தையல் வேலையில் ஈடுபடும் பெண்களின் கைகள் எண்ணெய் பசை இல்லாமல் உலர்ந்து போய் கரடு முரடாக இருக்கும். இதைப் போக்க கீழ்க்கண்டவாறு மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவி கொண்டு விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து அந்த விரல் முடியும் வரை மெதுவாக சக்கர வட்டமாக திருகி விடவேண்டும். எல்லா விரல்களிலும் செய்ய வேண்டும். பின் ஒவ்வொரு விரல்களுக்கு இடையே உள்ள தசைப் பகுதியை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின் மணிக்கட்டிலிருந்து விரல்கள் நுனி வரை மெதுவாக சீராக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் இப்பகுதிகளில் சீராக அமையும். இம்மாதிரி 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply