கேரள சிக்கன்

Loading...

கேரள சிக்கன்இறைச்சி – 500 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 125 கிராம்
வாதுமைப் பருப்பு – 15
மிளகாய் வற்றல் – 3
பெரிய ஏலக்காய் – 2
சிறிய ஏலக்காய் – 5
மிளகு – 10
கசகசா – அரை தேக்கரண்டி
ஜாதிக்காய் – ஒன்று
லவங்கப்பட்டை – ஒன்று சிறு துண்டு
கிராம்பு – 6
துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி
பூண்டு – 12
இஞ்சி – 15 கிராம்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
தனியா – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
முந்திரிப் பருப்பு – அலங்கரிப்பதற்காக
பச்சைக் கொத்தமல்லி – கொஞ்சம்

கசகசா, தனியா, சீரகம், பெரும் ஏலக்காய், வாதுமை, கிராம்பு, லவங்கப் பட்டை, ஜாதிக்காய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சற்றே வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த மசாலாப் பொருட்கள், இஞ்சி, பூண்டு, மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக அரிந்துக் கொள்ளவும்.
குக்கரில் நெய்யைக் காயவிட்டு வெங்காயத்தை வதக்கவும், பொடி செய்த சிறு ஏலக்காய்களைச் சேர்த்து ஒரு நிமிடம் புரட்டவும்.
மஞ்சள் பொடியையும் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளிகளை தோலுரித்து அவற்றுடன் தயிரையும், மசாலாவையும் சேர்த்து, தக்காளி வெந்து சுருளுகிற வரையில் வதக்கவும்.
இறைச்சியை சுத்தம் செய்து மசாலாயுடன் சேர்த்து சற்றே சிவக்கும் வரையில் வதக்கவும்.
ஒரு கப் தண்ணீரும், உப்பும் சேர்த்து குக்கரை மூடி பிரஷர் ஏறிய பின்னர் பத்து நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்திருக்கவும்.
குக்கர் ஆறியதும் திறந்து, தட்டில் கொட்டி அரிந்த பச்சைக் கொத்தமல்லியும், கரம் மசாலாவும் தூவவும். முந்திரிப் பருப்பினால் அழகு படுத்தவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply