கூந்தல் வளரும் தைலம்

Loading...

கூந்தல் வளரும் தைலம்தேவையான பொருட்கள்:

அரைக்கீரை விதை, வங்காளப்பச்சை, செம்பருத்திப் பூ, மகிழம் பூ, செண்பகப் பூ, வெட்டி வேர், குருவி வேர், விளாமிச்சை வேர், கஸ்தூரி மஞ்சள், கிச்சலிக் கிழங்கு, பூலாங் கிழங்கு, ஆலம் விழுது, தவனம், மருது, கதிர் பச்சை ஆகியவை.

தேவையான அளவில் இப்பொருட்களை வாங்கி வந்து வெய்யிலில் நன்றாகக் காயவைத்து எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இவற்றில் ஆலம் விழுது இலைகள் ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுதல் வேண்டும். மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, கல் உரலில் போட்டு தூள்களாகுமாறு இடித்தல் வேண்டும். நறுக்கி எடுத்த துண்டுகளையும், இடித்த தூள்களையும் கலந்து தேவையான அளவில் தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் கொட்டி, அடுப்பிலேற்றிக் காய்ச்சுதல் வேண்டும். அடுப்பில் வைத்துக் காய்ச்சும் பொழுது முதல் இரண்டு மணி நேரம் அடுப்பை சிறு தீயாக எரித்து அடுப்பிலிருந்து இறக்கி விடுதல் வேண்டும். இறக்கி வைத்து தைலத்தைச் சுமார் மூன்று நாட்கள் வரை அப்படியே வைத்திருந்து அதன் பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

(குறிப்பு: இப்பதினைந்து வகையான பொருட்களையும் தமிழ் மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பொருட்களை வாங்கும்பொழுது சமமான அளவில் எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளலாம்.)

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply