கூந்தல் பிரச்சனைகளை போக்கும் தேக்கு விதை எண்ணெய்

Loading...

கூந்தல் பிரச்சனைகளை போக்கும் தேக்கு விதை எண்ணெய்தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை உருவாக்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்- தேக்கு மரத்தின் காய்ந்த காய்களை எடுத்துகொள்ள வேண்டும். அவற்றை நசுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தால் இந்த விதைகளை உடைத்தோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம். பின்னர் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு 10 அல்லது 15 விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். விதையின் நிறம் இந்த எண்ணெய்யுடன் சேர்ந்து ஒரு இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.

இதை பயன்படுத்துவதன் மூலம் தலையில் ஏற்படும் பொடுகு கட்டுப்படுத்துகிறது. இந்த விதையை அன்றாடம் பயன்படுத்தும் போது முற்றிலுமாக பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம். மேலும் முடி கொட்டுதல், இள நரை போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த தைலம் மிகச் சிறந்த ஒன்றாக வேலை செய்கிறது. நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இதன் விதைகள் பயன்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply