கூகுளின் புத்தம் புதிய லோகோ!

Loading...

கூகுளின் புத்தம் புதிய லோகோ!இணைய உலகை தொடர்ந்தும் கலக்கிக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் புதிய லோகோவினை வெளியிட்டுள்ளது.
1998 ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கூகுள் நிறுவனம் தனது 17 ஆண்டு கால பூர்த்தியை முன்னிட்டு இப் புதிய லோகோவினை வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக தனது லோகோவினை கூகுள் நிறுவனம் மாற்றி வந்துள்ளமை தெரிந்ததே.

இப் புதிய லோகோ மாற்றப்பட்ட செய்தியினை கூகுள் டூடுள் ஊடாக நேற்றைய தினம் தனது அனைத்து பயனர்களுக்கும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள் இதோ.

1. இந்த புதிய லோகோ கூகுளின் ஏழாவது லோகோ.

2. கூகுள் லோகோவை மாற்றுவது புதிதல்ல.ஆனால் கூகுள் முதல் முறையாக லோகோ மாற்றம் பற்றி தனது முகப்பு பக்கத்தில் டூடுல் சித்திரம் மூலம் உலகிற்கு தகவல் தெரிவித்துள்ளது. முகப்பு பக்கத்தில் உள்ள டூடுலை (லோகோ) கிளிக் செய்தால் இது பற்றிய விவரத்தை காணலாம்.

3.இந்த புதிய லோகோவில் ஒருவித முழுமையையும், எளிமையையும் கவனிக்கலாம். கணிதவியல் வடிவத்தின் தூய்மை மற்றும் பள்ளி புத்தகத்திற்கான அச்சு வடிவம் இரண்டின் கலைவையே இதற்கு காரணம்.

4. கூகுளின் பழைய லோகோவில் பாருங்கள். இ எனும் எழுத்து சற்று சாய்வாக இருக்கும். புதிய லோகோவிலும் இ எழுத்து சாய்ந்தே இருக்கும். கூகுளின் எதையும் வித்தியாசமாக செய்யும் கலாச்சாரத்தின் அடையாளம் இது.

5.புதிய லோகோ மட்டும் அல்ல, புதிய எழுத்துருவும் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுளின் புதிய சேவைகளை அறிவிக்க இந்த எழுத்துரு பயன்படுத்தப்படும். லோகோ மற்றும் சேவை அறிவிப்புகளுக்கு இடையிலான தனித்தன்மை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

6. இதற்கு முன்னர் செல்போன்களில் குறைந்த வேக இணைப்பு எனில் அதற்கேற்ற கூகுள் லோகோ இடம்பெறும். இனி எல்லா இணைப்புகளிலும் ஒரே லோகோ தான்.

7.பழைய லோகோவின் எடை தெரியுமா? 14,000 பைட்கள். புதிய லோகோ மிகவும் இலேசானது. 305 பைட் தான் இதன் எடை.

8. புதிய லோகோவில் சிவப்பு, மஞ்சள்,பச்சை மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களின் துடிப்பான தன்மை லோகோவின் முழுமைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது.

9. கூகுள் மேற்கொண்டுள்ள லோகோ மாற்றங்களில் இதுதான் மிகவும் பெரியது. இதற்கு முந்தைய மாற்றங்கள் சிறிய அளவிலானவையே.

10. லோகோவின் சுருக்கமான வடிவத்தை குறிக்கும் ஆங்கில எழுத்தான சிறிய ஜிக்கு பதிலாக பெரிய ஜி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தில் சிவப்பு, மஞ்சள்,பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு வண்ணங்களும் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply