குஷ்தபா

Loading...

குஷ்தபாஇறைச்சி – ஒரு கிலோ
நெய் – 200 கிராம்
தயிர் – 100 கிராம்
தனியாத் தூள் – 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
அரரூட் மாவு – 5 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு 11
கொத்துமல்லி – ஒரு கட்டு

இறைச்சிகளை எலும்புகள் நீக்கி அரைத்துக்கொண்டு தனியா, மிளகாய், உப்பு, சீரகம், அரரூட் மாவு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இறைச்சி கலவையைச் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாதியளவு நெய்யை வாணலியில் விட்டு இறைச்சி உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
வாணலியில் மீதியுள்ள நெய்யை விட்டுக் காய்ந்ததும் தயிர், சர்க்கரை, அரைத்த இஞ்சி விழுது, 3 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து வரும்போது, இறைச்சி உருண்டைகளை மெதுவாகப் போட்டுப் பதினைந்து நிமிடங்கள் மூடி வேகவிடவும்.
பின்னர், மிகச்சிறிய தீயில் மேலும் 15 நிமிடங்கள் வைத்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லியைத் தூவவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply