குழந்தைகளுக்கு சத்தான உணவு

Loading...

குழந்தைகளுக்கு சத்தான உணவுமுதல் சில வருடங்கள் குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கும். பிறக்கும் இந்தியக் குழந்தை சுமார் 3 கிலோ இருக்கின்றது. ஆறு மாதத்தில் இது இரு மடங்காகும். ஒரு வயதில் சுமார் 9 கிலோ இருக்கும். ஒரு வயதில் குழந்தை அதிக சுறுசுறுப்புடன் இருப்பதால் அதிக சக்தியினை செலவழிக்கும்.

ஆகவே அதிக புரதம், கலோரி இவை நன்கு தேவைப்படும். முதல் 6 மாதம் தாய்பால் மட்டுமே குழந்தைக்கு அவசியம் ஆகின்றது. அதன் பிறகு 2 வயது வரை உணவும், தாய்பாலும் தேவை. உணவு என கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது,

* எளிதில் கிடைக்கக் கூடிய பொருளாக இருக்க வேண்டும்.

* எளிதில் சமைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

* அதிக செலவில்லாததாக இருக்க வேண்டும்.

* ருசியானதாக குழந்தைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

* சரியான சத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும். பல குழந்தைகள் 1 வயதினை நெருங்கும் பொழுது அவர்களது தாய்மார்களால் தாய்பால் கொடுக்க முடிவதில்லை. அவர்களுக்கு கூடுதல் உணவின் மூலமே சத்தினை தரமுடியும்.

பொதுவாக வீடுகளில் தயாரிக்கும் கஞ்சி மாவில் கலோரி சத்து கிடைத்து விடும். அவை அரிசி, கோதுமை, சோளம், ராகு, கம்பு இவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால் புரதம் மிகக் குறைவாகவே இருக்கும்.

எள், வேர்கடலை இவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும் சரி, அப்படியே சேர்த்தாலும் சரி. நல்ல புரதமும் கூடவே நல்ல கலோரி சத்தும் கிடைக்கும். இது தவிர வளரும் குழந்தைக்கு கால்ஷியம், வைட்டமின் ஏ

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply