குடமிளகாய் வதக்கல்

Loading...

குடமிளகாய் வதக்கல்குடமிளகாய் – கால் கிலோ
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
கடலைமாவு – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – அரைத் தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
எலுமிச்சம்பழம் – அரை மூடி
உப்பு – தேவையான அளவு

குடமிளகாயைக் கழுவி நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் கடுகைத் தாளித்து பெருங்காயம், குடமிளகாய் சேர்த்து மூடிவிடவும்.
சர்க்கரை, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கடலைமாவு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
குடமிளகாய் வெந்தபிறகு கலவையை அதன் மேல் தூவவும். இதனை கிளறாமல் மூடி போட்டு மூன்று நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடவும்.
பின்னர் தீயை அதிகப்படுத்தி மூடியை நீக்கிவிட்டு நன்றாகக் கிளறிச் சிறிது நேரம் கழித்து இறக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply