கிரீம் பிஸ்கட்டுகள்

Loading...

கிரீம் பிஸ்கட்டுகள்சர்க்கரை – 60 கிராம்
வெண்ணெய் – 60 கிராம்
மைதா மாவு – 80 கிராம்
கஸ்டர்ட் பவுடர் அல்லது கார்ன் ஃப்ளார் – 45 கிராம்
வெனிலா எசன்ஸ் – சில துளிகள்
முட்டை – பாதி
பிஸ்கட்டுகளின் நடுவில் வைக்க:
வெண்ணெய் – 30 கிராம்
சர்க்கரை நைசாக பொடித்தது – 60 கிராம்

பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயும் நன்றாகக் குழைக்கவும்.
மைதாமாவு, கஸ்டர்ட் பவுடர் ஆகியவற்றை நன்றாகச் சலித்து, பின் குழைத்த வெண்ணெயுடன் சேர்த்து முடிவில் முட்டையையும் சேர்த்து பூரிமாவு போல பிசையவும்.
மெல்லிய அப்பளமாக இட்டு பிஸ்கட் அச்சினால் வட்டமாகவோ அல்லது வேறு ஏதாவது அச்சினால் வேறு மாதிரியாகவோ வெட்டவும்.
பிறகு வெட்டிய துண்டங்களை தட்டில் அடுக்கி 350 டிகிரி F சூட்டில் சுமார் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் வெண்ணெய், சர்க்கரையும் சேர்த்து குழைத்த கலவையில் சிறிது வைத்து இரு பிஸ்கட்டுகளையும் ஒட்டவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply