காலிஃப்ளவர் முட்டை பொரியல்

Loading...

காலிஃப்ளவர் முட்டை பொரியல்காலிஃப்ளவர் – ஒரு பூ
முட்டை – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
பட்டை – 1
கிராம்பு – 2
சோம்பு – அரைத் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 குழிக்கரண்டி

காலிஃப்ளவரை பொடி பொடியாய் நறுக்கி சூடான தண்ணீரில் 2 நிமிடம் போட்டு வடித்துப் பிறகு நன்றாக கழுவிக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தபின் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கிய பிறகு அதில் காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.
பின்பு அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கியபின் லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
காலிஃப்ளவர் நன்கு வெந்து சுருள ஆரம்பித்த பிறகு, பூவை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து நடுவில் முட்டையை உடைத்து ஊற்றி சற்று வெந்த பிறகு பூவுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
முட்டை வாசனை போய் நன்றாக வெந்தபிறகு, தேவையெனில் ஒரு சிட்டிகை கரம் மசாலா பொடியினைத் தூவி இறக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply