காலிஃப்ளவர் குருமா

Loading...

காலிஃப்ளவர் குருமாகாலிஃப்ளவர் – கால் கிலோ
மிளகாய் வற்றல் – 5
பெரிய வெங்காயம் – 1
சோம்பு – 1 தேக்கரண்டி
தேங்காய் – 2 சில்லு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு

காலிஃப்ளவரை கழுவி, சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல், தேங்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கினை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 பாகங்களாய் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, நறுக்கிய வெங்காயம், காலிஃப்ளவர் போட்டு வதக்கவும்.
பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்கி சிறிது நீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
வெந்தவுடன், இறக்குவதற்கு முன்பு கொத்தமல்லி தழையினைத் தூவி இறக்கவும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN