காலிஃப்ளவர் கடுகுப் பொரியல்

Loading...

காலிஃப்ளவர் கடுகுப் பொரியல்காலிஃப்ளவர் – ஒன்று
உருளைக்கிழங்கு – 2
எண்ணெய் – கால் கப்
கடுகு – 2 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பச்சைமிளகாய் – 3
உப்பு – ஒரு சிட்டிகை

காலிஃப்ளவரை கொதிக்கும் வெந்நீரில் ஊற வைத்து பின் எடுத்து கொத்து கொத்தாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு நன்கு வெடித்ததும் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
பின்பு மஞ்சள் தூள், கடுகு விழுது பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
பத்து நிமிடங்கள் கழித்து தீயை அதிகப்படுத்தி நன்கு வதக்கி காய்கறிகள் நன்றாக வெந்த பின் இறக்கி வைக்கவும்.
இப்போது காலிஃப்ளவர் கடுகுப் பொரியல் ரெடி. இது சாதத்துடன் தொட்டுகொள்ள வெகுசுவையாக இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply