கார்த்திகை பணியாரம்

Loading...

கார்த்திகை பணியாரம்பச்சரிசி – 200 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
பயத்தம் பருப்பு – 200 கிராம்
வெல்லம் – 200 கிராம்
தேங்காய் – ஒரு மூடி
ஏலக்காய் – 3
எண்ணெய் – கால் லிட்டர்
உப்பு – ஒரு தேக்கரண்டி

பச்சரிசி, புழுங்கல் அரிசி, பயத்தம் பருப்பு இவைகளை தனித்தனியே 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நன்கு அலசி முதலில் பயத்தம் பருப்பை தண்ணீர் விடாமல் கிரைண்டரில் 7 நிமிடம் நன்கு பூத்து வரும் வரை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் ஒன்றாக நன்கு கழுவி தேங்காய் ஒரு முடி துருவி மூன்றையும் ஒன்றாக கலந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.
ஒரு சிறிய தேக்கரண்டி உப்பு போடவும். 10 நிமிடம் நன்கு அரைத்து பயத்தம் மாவு உள்ள பாத்திரத்தில் எல்லாவற்றையும் போடவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தூளாக போட்டு ஒரு குழி கரண்டி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
வெல்லக் கட்டுகள் கரைந்து கொதிக்கும் போது இறக்கி விடவும்.
ஆறிய பின் ஏலப்பொடியை சேர்த்து எல்லா மாவும் கலந்த பாத்திரத்தில் கொட்டி கிளறவும்.
இவை கலந்த மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்து வாணலியை வைத்து எண்ணெய் 100 மில்லியை ஊற்ற வேண்டும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு குழி கரண்டியால் மாவை அல்லி எண்ணெயில் ஊற்ற வேண்டும்.
சாரணியால் எண்ணெய் எடுத்து பணியாரம் மேல் ஊற்ற வேண்டும். பணியாரம் நன்கு உப்பி வரும்.
பின்பு திருப்பி போட்டு நன்கு சிவந்த உடன் எடுக்க வேண்டும். அரை மணி நேரத்தில் சுவையான “கார்த்திகை பணியாரம்” ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply