காய்கறி ஊறுகாய்

Loading...

காய்கறி ஊறுகாய்நறுக்கிய காரட் – 100 மில்லி
பட்டாணி – 100 மில்லி
பிஞ்சு பீன்ஸ் – 100 மில்லி
பச்சைமிளகாய் – 10
நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்
மிளகாய்த்தூள் – 3/4 கப்
எலுமிச்சம் பழம் – 2
வினிகர் – தேவைக்கேற்ப
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

பச்சைமிளகாயை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்த காய்கறிகளை வினிகரில் வேக வைத்து குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகைத் தாளித்து ஊறுகாயில் ஊற்றவும்.
எலுமிச்சம் பழ சாற்றை ஊறுகாயில் பிழிந்து கரண்டியால் கிளறி விடவும்.
எந்த ஊறுகாயிலும் வினிகர் சேர்த்து செய்தால் வெகு நாள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN