கலர் பூந்தி | Tamil Serial Today Org

கலர் பூந்தி

ads 1

கலர் பூந்திமைதாமாவு – 2 கப்
சர்க்கரை – 4 கப்
டால்டா – அரை லிட்டர்
ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி
கலர் பவுடர் – அரை தேக்கரண்டி (ஒவ்வொரு வண்ணத்திலும்)
சோடா உப்பு – ஒரு சிட்டிகை

மைதாமாவினை தண்ணீர் விட்டு மிகவும் கெட்டியாக அல்லது தண்ணீராக இல்லாமல் பதமாக கரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கரைத்த மாவினை பூந்தி கரண்டியில் தேய்த்து, சிவக்க விடாமல் முத்துக்களாய் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
மாவு மிகவும் கெட்டியாக இருக்குமாயின் சரியாக விழாது. அதனால் சற்று நீர்க்க இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
பாகு மிகவும் கெட்டியாக இல்லாமல், பூந்தி ஊறும் பதத்தில் இருக்கவேண்டும்.
ஒவ்வொரு வண்ணங்களையும் தனித்தனியே சிறிதளவு சர்க்கரைப்பாகுடன் கலந்து எடுத்துக் கொள்ளவும்.
பொரித்து வைத்துள்ள பூந்திகளை வண்ண சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும்.
பிறகு எல்லா வண்ண பூந்திகளையும் ஒன்றாய் கலந்து கொள்ளவும்.

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11