கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் வலிப்பு நோய் ஏற்படும் !

Loading...

கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் வலிப்பு நோய் ஏற்படும் !கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களுக்கு வலிப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவந்துள்ளது.
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் இயற்கை மருத்துவம் கசந்து போய் ஆங்கில மருத்துவம் அனைவரையும் பிடிகொண்டுள்ளது. சாதாரண கால்வலி தொடங்கி கருக்கலைப்பு வரை இன்று ஆங்கில மருந்துகளை உட்கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு நோயை குணப்படுத்த நாம் உண்ணும் ஆங்கில மருந்துகள் மற்றொரு நோயை உண்டாக்குகின்றன. அதனை குணப்படுத்த மற்றொரு மருந்து என, அங்கில மருந்து நமக்கு அளிக்கும் உபாதைகள் ஏராளம்.
அந்த வகையில் புதிய வரவாக கருத்தடை மாத்திரைகளும் நமக்கு தீங்கு அளிக்கக் கூடியவை தான் என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருவுற்ற பெண் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வலிப்பு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த லயோலா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதயத்தில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply