கம்பு கொழுக்கட்டை

Loading...

கம்பு கொழுக்கட்டைகம்பு மாவு – 3 கப்
ஏலக்காய் – 3
நெய் – ஒரு தேக்கரண்டி
துருவிய தேங்காய் – ஒரு கப்
வெல்லம் – 200 கிராம்
உப்பு – ஒரு தேக்கரண்டி

முதலில் கம்பு மாவை 5 நிமிடம் வாணலியில் விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு கம்பு மாவில் தேங்காய், ஏலக்காய், நெய் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒன்றரை டம்ளர் தண்ணீரில் வெல்லத்தை போட்டு அடுப்பில் வைத்து சூடு படுத்தவும்.
வெல்லம் நன்றாக கரைந்த பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் கலந்து வைத்துள்ள மாவில் வெல்லக்கரைசலை சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிசைந்து கொண்டு பின் சிறிய சிறிய கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.
கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான கம்பு கொழுக்கட்டை தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply