கடலைபருப்பு பணியாரம்

Loading...

கடலைபருப்பு பணியாரம்மைதா மாவு – 2 கப்
கடலைப்பருப்பு – 2 கப்
பொடித்த வெல்லம் – ஒன்றரை கப்
தேங்காய் – அரை கப்
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – 2 தேக்கரண்டி
நெய் அல்லது டால்டா – ஒரு தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, சர்க்கரை, உப்பு சேர்த்து சிறிது தளர்வாக பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் நெய்யை சேர்த்து கலக்கி எடுத்து வைக்கவும்.
குக்கரில் கடலை பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
பருப்புடன் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து பிசையவும்.
பருப்பு கலவையை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் உருட்டி வைத்த உருண்டைகளை மைதா மாவு கலவையில் நனைத்து எண்ணெயில் போட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply