கடலில் மிதக்கும் அதிநவீன ஆய்வுகூட நகரம்

Loading...

கடலில் மிதக்கும் அதிநவீன ஆய்வுகூட நகரம்சுமார் 7,000 வரையானவர்களை கொள்ளக்கூடியதும், கடலின் மேற்பரப்பில் நிலையாக இருக்கக்கூடியதுமான மிதக்கும் நகரம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
பிரான்ஸ் நாட்டு கட்டிடக் கலை நிபுணரான Jacques Rougerie என்பவரின் எண்ணத்தில் உதித்த இந்த நகரமானது 900 மீற்றர்கள் நீளமும் 500 மீற்றர்கள் அகலமும் உடையதாக வடிவமைக்கப்படவுள்ளது.

இந்த நகரமானது உலகெங்கிலும் உள்ள 7,000 வரையான விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய ஆராய்ச்சிக் கூடமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள், தங்குமிடங்கள், விரிவுரை மண்டபங்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் உயரமானது நீர்ப் பரப்பிற்கு மேல் 60 மீற்றர்கள் உயரமாகவும், நீர்ப்பரப்பிற்கு கீழ் 120 மீற்றர்கள் உடையதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது.

மேலும் இங்கு நீண்ட கால ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவிருப்பதனால் அங்கு எந்தவிதமான கழிவுப் பொருட்களும் வெளியேற்றப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது. காரணம் அவையும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதனால் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply