கசகசா அல்வா

Loading...

கசகசா அல்வாகசகசா – ஒரு கப்
சர்க்கரை – 2 கப்
பால் – ஒரு கப்
நெய் – ஒரு கப்

முதலில் கசகசாவை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் பாலை விட்டு அதில் அரைத்து வைத்துள்ள கசகசா விழுதினையும், சர்க்கரையையும் போட்டு கொதிக்க விடவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் தொடர்ச்சியாக கிளறிக் கொண்டே இருக்கவும். சர்க்கரை நன்கு பாகாக கரைந்த பிறகு நெய்யினை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு அல்வா பக்குவத்திற்கு வந்தபிறகு அடுப்பில் இருந்து இறக்கவும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply