ஒரிஜினல் தக்காளி சாதம்

Loading...

ஒரிஜினல் தக்காளி சாதம்தக்காளி – 5
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் – 8
உதிரியாக வடித்த சாதம்

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் 5 பல் பூண்டை இடித்து சேர்த்து காய்ந்த‌ மிளகாயை கிள்ளி போடவும்.

அதனுடன் பொடியாக‌ நறுக்கிய தக்காளி சேர்த்து அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி தேவையான‌ அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் வேக‌ விடவும்.

இடையிடையே நன்கு கிளறி விடவும். நன்கு மசிந்து வரும் வரை வேக‌ விடவும்.

இதனுடன் உதிர் உதிராக‌ வடித்த‌ சாதம் சேர்த்து நன்கு கிளறவும்.

தனித்த‌ தக்காளி சுவையுடன் கூடிய‌ தக்காளி சாதம் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply