எவ்வளோ சாப்பிட்டாலும் பசிச்சுக்கிட்டே இருக்கா

Loading...

எவ்வளோ சாப்பிட்டாலும் பசிச்சுக்கிட்டே இருக்காசிலர் நாள் முழுதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் மனோபாவம் கொண்டிருப்பார்கள். கேட்டால் பசித்துக் கொண்டே இருக்கிறது என்பார்கள். இவர்களை சுற்றி ஓர் பேக்கரி இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் இல்லை. சிறுதீனி, பெரும் தீனி என சகலமும் இவர்களது வாயுக்குள் சென்றுக் கொண்டே இருக்கும்.

இது ஏதோ உணவிற்கு அடிமையாகும் தன்மை கிடையாது. செரிமானக் கோளாறு பிரச்சனையாக கூட இருக்கலாம். ஏனெனில், இவ்வாறு இருப்பவர்கள் தான் நம் வீட்டில் கழிவறையை அதிகமுறை விசிட் செய்துவிட்டு வருபவர்களாக இருப்பார்கள்.
எனவே, நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ இவ்வாறு எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் குணமுடையவர்களாக இருந்தால் இதைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். இனி, இதில் இருந்து வெளிவருவது எப்படி என பார்க்கலாம்…
உணவு வகை-
உண்மையில், சரியான இடைவேளையில் உணவுகள் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. அது, காய்கறிகளாக, பழங்களாக, கீரை வகைகளாக, தானிய உணவுகளாக இருக்க வேண்டும். நொறுக்கு தீனி, ஜங்க் ஃபுட்ஸாக இருக்கக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் அளவு முக்கியம் என்று கூறுகிறார்கள். நல்லதாக இருந்தால் கூட அதை சரியான அளவு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமான தேர்வு –
நீங்கள் சாப்பிடுவது தவறல்ல ஆனால், அவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். கிரீன் டீ, எலுமிச்சை ஜூஸ், நட்ஸ், பிஸ்கட், உலர்ந்த திராட்சைகள், பேரிச்சம்பழம் போன்ற சத்தான ஆரோக்கிய உணவுகளை பசிக்கும் போது சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
சாப்பிடக் கூடாதவை-
வறுத்த உணவுகள், வடை, போண்டா, பஜ்ஜி, பிட்சா, பர்கர், கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்ற உணவுகளை முழுதும் தவிர்க்க வேண்டியது அவசியம். அதிலும் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இவ்வாறான உணவுகளை நாள் முழுக்க சாப்பிட்டால் உடல் பருமன் உங்களை எமனிடமே அழைத்து சென்றுவிடு
நட்ஸ், பாதாம்-
வால்நட்ஸ் மற்றும் பாதாமில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இருக்கிறது. மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற உடலுக்கு தேவையான ஆரோக்கிய ஊட்டச்சத்துகள் இவற்றில் மிகுதியாக இருக்கிறது.
பழங்கள் –
ஆப்பிள் போன்ற பழங்கள் தினமும் சாப்பிடலாம். இது உங்கள் பசியை குறைக்க உதவும் மற்றும் இது, உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கொண்டுள்ள பழமும் கூட. வெறும் பழமாக சாப்பிட பிடிக்காவிட்டால் அதை சாலட் செய்து சாப்பிடலாம்.
தயிர்-
தயிரில், நிறைய உயர்ரக கால்சியமும், புரதமும் இருக்கிறது. இதில் இருக்கும் ஆரோக்கிய பாக்டீரியாக்கள் செரிமானத்தை சீராக்க உதவும். மற்றும் உடல் சூட்டை தணிக்கும் தன்மையைக் கொண்டது தயிர். தயிரோடு ஸ்ட்ராபெர்ரியை சேர்த்தும் சாப்பிடலாம்.
ஓட்ஸ் உணவு-
ஓட்ஸ் உணவு, உங்கள் கொழுப்பை குறைக்கவும், இதயத்திற்கு வலுவும் தரவல்லது. இதோடு நட்ஸ் அல்லது அறுத்த பழங்களை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
ஆளிவிதை-
ஒமேகா 3-யின் களஞ்சியம் ஆளிவிதை என்றால் அது மிகையாகாது. இதோடு, குறைந்த கொழுப்பு உள்ள சீஸ் மற்றும் பழங்கள் சேர்த்து சாப்பிடுவது நல்ல உணவாக அமையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply