எந்த நேரத்தில் காபி குடிப்பது நல்லது?

Loading...

எந்த நேரத்தில் காபி குடிப்பது நல்லதுகாலை உணவுக்குப் பிறகோ அல்லது 11 மணி அளவில் 2 பிஸ்கட் உடனோ காபி பருகுவது நல்லது. காலை எழுந்தவுடன் எனக்கு காபி

குடித்தால் தான் ஆச்சு என்பவர்கள் முதலில் 2-3 கிளாஸ் தண்ணீர் குடித்து பிறகு காபி குடிக்கலாம்.

காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு 1 மணி நேரம் முன்பு காபி குடிக்கலாம்.

உடற்பயிற்சி செய்த பிறகு காபி

பருகுவதை தவிர்க்கவும்.

கறுப்பு காபி என சிலர் காபி டிகாஷனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். இதில் சர்க்கரையின் கலோரி சத்து சேரும். காபிக்கு

கலோரி சத்து 8 அவுன்ஸிற்கு 2 கலோரி ஆகும்.

பொதுவாக நம் நாட்டில் பால் சேர்த்த காபி குடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. அதனை டிகிரி காபி என்றும், ஸ்ராங் காபி என்றும்

பல பெயர்களில் அருந்தும் காபி பிரியர்கள் அதிகம். ஸ்டிராங் காபி பொதுவில் அசிடிடி பிரச்சினையை அதிகரிக்கச் செய்யும்.

ஆக

கருப்பட்டி காபி அல்லது சாதாரண பால் சேர்த்த காபியே நல்லது.

சர்க்கரை மாத்திரைகள் பொதுவாக வேண்டாம் என்றே அறிவுறுத்தப்படுகின்றது. பனை சர்க்கரை, கருப்பட்டி ஆகியவற்றை அதிகம்

பயன்படுத்த சிறுவயது முதல் பழக்கப்படுத்தப்பட்டால் சர்க்கரை உபயோகம் வெகுவாக குறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply