உருளைக் கிழங்கு குல்சா

Loading...

உருளைக் கிழங்கு குல்சாகோதுமை மாவு – 100 கிராம்
சோள மாவு – 50 கிராம்
உருளைக் கிழங்கு – 25 கிராம்
நெய் – 10 கிராம்
மிளகாய் – 6
தனியா – அரைத்தேக்கரண்டி
பட்டை – 5 கிராம்
இலவங்கம் – 5 கிராம்
சோம்பு – 5 கிராம்
சாப்பாட்டு சோடா – கால் தேக்கரண்டி
எண்ணெய் – 300 கிராம்
உப்பு – தேவையான அளவு

கோதுமை மாவு, சோள மாவு, சிறிது உப்பு, சோடா, நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு பூரி மாவு போல் கெட்டியாகப் பிசைந்து ஈரத்துணிப் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
உருளைக் கிழங்கை வேகவைத்து தோலை உரித்துப் பொடித்துக் கொள்ளவும்.
மிளகாய், தனியா, பட்டை, இலவங்கம், சோம்பை விழுதாக அரைத்து பொடித்த உருளைக்கிழங்கில் போட்டு உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து எலுமிச்சங்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
பிசைந்து வைத்த மாவை எடுத்து மீண்டும் ஒரு முறை பிசைந்து எலுமிச்சங்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
சிறிய அப்பளம் செய்து அதனுள் உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து கோபுரம் போல் பூரி மாவை இழுத்து மூடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்யை விட்டு அடுப்பில் வைத்து அது காய்ந்ததும், குல்சாவைப் போட்டு பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply