உருளைக்கிழங்கு முட்டைக் குழம்பு

Loading...

உருளைக்கிழங்கு முட்டைக் குழம்புமுட்டை – 4
உருளைக்கிழங்கு – கால் கிலோ
வெங்காயம் – 100 கிராம்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
வெந்தயம் – கால் தேக்கரண்டி
லவங்கப்பட்டை – ஒரு அங்குலத்துண்டு
எலுமிச்சம்பழம் – அரை மூடி
தேங்காய் – அரை மூடி
உப்பு – தேவையான அளவு

முட்டையை நன்கு அவித்து ஓட்டை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கினை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும். முதலில் எடுக்கும் கெட்டிப் பாலையும் இரண்டாவது எடுக்கும் பாலையும் தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.
இரண்டாவது எடுத்த தேங்காய்ப் பாலில் பச்சைமிளகாய், மஞ்சள்தூள், வெந்தயம், பூண்டு, இஞ்சி, பட்டை, கறிவேப்பிலை, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைப் போடவும்.
இதை அடுப்பில் வைத்து வேகவிடவும். உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலையும் சிறிது எலுமிச்சை சாற்றினையும் ஊற்றவும்.
முட்டைகளை இரண்டாக வெட்டிப் போட்டு வேகவிடவும். நன்கு கொதிக்கும் வரை விடாது கிளறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply