உருளைக்கிழங்கு கறி

Loading...

உருளைக்கிழங்கு கறிஉருளைக்கிழங்கு – 100 கிராம்
கடுகு – அரை தேக்கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிய துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
நறுக்கிய பச்சைமிளகாய் – 3
தயிர் – ஒரு கப்
கடலைமாவு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 50 கிராம்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை அளவு
தனியாத்தூள் – ஒன்றரை தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

உருளைக்கிழங்கினைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கை வாணலியில் எண்ணெய் ஊற்றி வேகும் வரை வதக்கவும்.
பிறகு மிக்ஸியில் இஞ்சி, பச்சைமிளகாய், தக்காளி, தயிர் இவற்றை போட்டு அடிக்கவும்.
பின்பு கடலைமாவையும், தனியாதூளையும் போட்டு விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை எடுத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகை போடவும்.
கடுகு வெடித்தவுடன் வெந்தயம், பெருங்காயம் போடவும். சிவந்தவுடன் இந்த விழுதை போட்டு இதனுடன் மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் உப்பு மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு கிளறவும்.
அதில் பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை போட்டு பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply