உதடுகள்…

Loading...

உதடுகள்...உதடுகளும் கூட வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. எப்படியெல்லாம் சூரியனிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கலாம்? இதோ சில குறிப்புகள்:

1. வெப்பத்தால் உதடுகள் வாட நேரிடலாம். இதனைத் தவிர்க்க உதடுகளின் மீது வாசலைன் பூசிக் கொள்ளலாம்.

2. வெயிலினால் உதடு கறுத்தவர்கள் கொத்துமல்லிச் சாற்றை இரவில் உதடுகளின் மீது பூசி வர, கறுத்த நிறம் மாறும். விளக்கெண்ணெயும் தடவலாம்.

3. உதடு வெடிப்பு கண்டவர்கள் ரோஜா இதழ்களைப் பால் விட்டு நன்றாக அரைத்து, பின் உதடுகளில் தடவி வரலாம்.

4. முட்டை வெண்கரு, பாதாம் பவுடர், பாலேடு இம் மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும். பின்பு தேங்காய் எண்ணெய் தடவி விடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply