உங்கள் மரணம் இரத்த பரிசோதனையில் அறியலாம் !

Loading...

உங்கள் மரணம் இரத்த பரிசோதனையில் அறியலாம் !ஒருவரின் மரணத்தை தெரிந்து கொண்டால், வாழும் நாட்கள் கொடியதாகிவிடும் என்று பலருக்கும் தெரியும். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தங்களின் மரணம் எப்போது நிகழும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இத்தகையவர்களுக்காக ஓர் எளிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில் ஒருவரின் மரணத்தை இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
இரத்த பரிசோதனையின் மூலம் ஒருவரின் வாழ்நாள் மற்றும் முதுமை போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும்படியான இரத்த பரிசோதனை முறை வெளிவரவிருக்கிறது. இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்!!!
1.செல்கள் மற்றும் குரோமோசோம்கள்
ஒருவரின் உடலில் இருக்கும் இரத்த செல்களை துல்லியமாக கணக்கிடுவது மற்றும் குரோமோசோம்களின் அளவு, அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆராய்வதன் மூலம், ஒருவரின் வாழ்நாள், அவருக்கு வரப்போகும் நோய்கள் என்னவென்று கணிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

2. டெக்சாஸ் பல்கலைகழக ஆய்வாளர்
இந்த சோதனையைப் பற்றி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மருத்து மைய செல் பயாலஜி பிரிவு வல்லுநர் ஜெர்ரி ஷே கூறியுள்ளார்.

3. இந்த சோதனையானது இரத்த செல்கள் மற்றும் டெலோ மெரஸ் என்னும் குரோமோசோம்கள் மூலம் மேற்கொள்ளவுள்ளது.

4. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த இரத்த பரிசோதனை குறித்து ஜெர்ரி கூறியதாவது, விரைவில் அறிமுகமாகவிருக்கும் இந்த இரத்த பரிசோதனையின் மூலம் ஒருவரின் முதுமை, எப்போது இறக்கப் போகிறார் என்பது மட்டுமின்றி, என்ன நோய்கள் தாக்கக்கூடும் என்பதை அறிந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்த நோய்கள் தாக்காமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

5. பயாலாஜிக்கல் ஏஜ்
சிலர் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுவார்கள். அதற்கான காரணங்களையும் இந்த இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றும் டாக்டர் ஜெர்ரி கூறியுள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply