உங்கள் இதயத்தின் வயது இது தான்…

Loading...

உங்கள் இதயத்தின் வயது இது தான்...பிரிட்டனின் இதய அறக்கட்டளையுடன் இணைந்து பர்மிங்ஹாம் இதய ஆய்வு நிறுவனம் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதயத்தின் வயதை அதிகரிக்க காரணம் புகைப்பிடித்தல், ரத்த அழுத்த அளவீடு மற்றும் உடல் எடை போன்றவையே ஆகும்.
இந்நிலையில், அமெரிக்காவின் தென்பகுதியில் இருக்கும் மிசிசிப்பி, மேற்கு விர்ஜீனியா, லூசியானா, கென்டக்கி மற்றும் அலபாமா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வயதைக் காட்டிலும் இதயத்தியற்கு அதிக வயதாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு நேர்மறையாக உட்டா, கோலராடோ, கலிபோர்னியா, மாஸாச்சூசெட்ஸ் மற்றும் ஹவாய் பகுதிகளில் இதயத்தின் வயது அவர்களின் வயதைவிட குறைவாகவே உள்ளது.
அதில் குறிப்பாக கருப்பின ஆண் மற்றும் பெண்களுக்கு இதயத்தின் வயது மிகமிக அதிகமாக உள்ளது.
மேலும், கருப்பின பெண்களுக்கு சராசரியாக ஐந்து முதல் ஏழு வயது அதிகமானதாக, மற்ற இன பெண்களைக் காட்டிலும் உள்ளது.
அதேபோல, கருப்பின ஆண்களுக்கு சராசரியாக மூன்று முதல் நான்கு வயது அதிகமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் ஒவ்வொரு ஏழு வினாடிக்கும் ஒருவர் இதய குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளால் உயிரிழக்கின்றனர்.
இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாமும் முயற்சிக்க முடியும். அளவான சத்துமிக்க உணவு, சிறிது நேர உடற்பயிற்சி மற்றும் உடலின் எடை மீது குறைந்தபட்ச அக்கறை ஆகியவை அவசியமானது.
ஆயினும், இதை கவனித்துக் கொண்டாலே போதும்..இதய நோய் மட்டுமின்றி எந்த நோயும் நம்மை நெருங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply