இரண்டே நாட்களில் புற்றுநோயைக் கண்டறியும் நவீன முறை | Tamil Serial Today Org

இரண்டே நாட்களில் புற்றுநோயைக் கண்டறியும் நவீன முறை

Loading...

இரண்டே நாட்களில் புற்றுநோயைக் கண்டறியும் நவீன முறைஇரண்டே நாட்களில் புற்றுநோய்த் தாக்கத்தினை கண்டறியக்கூடய கணனி புரோகிராம் ஒன்றினை டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் ஊடாக இரப்பை, மூளை உட்பட உடலின் ஏனைய பகுதிகளில் உண்டாகும் புற்றுநோய்களையும் கண்டறியக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

தற்போது 85 சதவீதம் வரை வெற்றிகரமாக செயற்படும் இக் கணினிப் புரோகிராமை மேம்படுத்தும் பணியில் டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குறித்த குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

தற்போது உள்ள முறைகள் மூலம் புற்றுநோய்களைக் கண்டறிய நீண்ட நாட்கள் எடுப்பதனால் நோயாளி இறப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதனால் இப்புதிய முறையானது பெரிதும் முன்னேற்றகரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading...
Rates : 0
VTST BN